Sunday, February 10, 2013

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம்

டோண்டு அவர்களை சமீபத்தில் (இந்த வார்த்தை என்னைப் போன்ற மூத்தபதிவர்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுக்க டோண்டு நினைக்க வைத்து விடும். )ஐந்துமாதங்களுக்கு முன்பு துளசி வீட்டு விசேஷத்தில் சந்தித்தேன், துளசிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை, டோண்டு என்றதும், என்ன ஆச்சு இவருக்கு என்று மாய்ந்துப் போனார். என்ன சார் உடம்புக்கு என்றதும் கேன்சர்! ஆபரேஷன் ஆயாச்சு, நான்கு லட்சம் ரூபாய் இதுவரை செலவாகியிருக்கு, ஆனால் ஆபரேஷனுக்கு பிறகான ரேடியேஷனும், கீமோதொரபியும் கொடுமையாய் இருக்கு என்றார் அவரால் அதிகம் பேச முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தவர், “ உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்” என்று ஆரம்பித்தார். நான் கொஞ்சம் முழிக்க, “ போலி டோண்டு பிரச்சனையில் கடைசியில் அவன் மன்னிப்பு கேட்டதும், மன்னிக்க மாட்டேன் என்றீர்களே அதைச் சொன்னேன் " என்றார். சட்டென்று மனசுக்குள் ஒரு ஆயாசம் . எத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் அந்த குப்பைகளை மனசில் போட்டு உழப்பிக் கொண்டு இருக்கிறாரே என்று தோன்றியது. அன்றைய மனநிலையில்,” சிலவற்றை என்றைக்கும் மன்னிக்க முடியாது என்று டோண்டு பதிவில் பதில் சொல்லியிருந்தேனாம். எனக்கு அவர் சொல்லும்பொழுதுகூட நினைவுக்கு வரவில்லை. அந்த ஆபாச தாக்குதலில் பெரும்பாலான பதிவர்கள் பாதிக்கப்பட்டனர். நானும் உட்பட அன்றைய பெண் பதிவர்கள் பெயரில் ஆபாச பதிவுகள் தொடங்கப்பட்டன. ஓரிரு பெண்பதிவர்கள் இணையத்தில் இருந்து விலகினர். மற்றவர்கள் வேதனைப் பட்டோமே தவிர, அதை பெரியதாய் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் டோண்டு சாரால் அதை மறக்கமுடியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னிடம் அதே விஷயத்தைஆரம்பிக்கிறார் என்றால், எவ்வளவு மனசில் போட்டு குழப்பிக் கொண்டு இருந்திருக்க வேண்டும்? ஓவர் ஸ்ரெஸ் புற்று நோய்க்கு ஒரு காரணமாக சொல்லுகிறார்கள். அறுபதுகளில் இருந்தவருக்கு மரணம் சீக்கிரம்தான். பல விஷயங்களை போகிற போக்கில் , தனக்கு சரி என்று தோன்றுவதை பட்டவர்த்தமாய் சொல்லிக் கொண்டு இருந்தவர், விவாதங்களுக்கு சளைக்காதவர், தடம் மாறினால் போடா ஜாட்டன் என்று சொல்லியதை இந்த விஷயத்திலும் மனப்பூர்வமாய் சொல்லியிருந்தால், இன்னும் வாழ்ந்திருக்கலாமோ என்று மனசு அங்கலாய்க்கிறது. மனித மனம் விசித்திரமானது, தமிழ் இணைய வாசகர் வட்டம் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறது டோண்டு சார் :-(

29 பின்னூட்டங்கள்:

At Sunday, 10 February, 2013, சொல்வது...

என்னமோ பத்தி பிரித்துப் போட முடியவில்லை

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

:(((((((((((((

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

துளசி, இன்னும் வாழ்ந்திருக்கலாமோ என்ற அங்கலாயிப்பு, ஏதோ எழுதிப் போட்டு விட்டேன்.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

சமீபத்தில் நிகழ்ந்த மிக மோசமானதொரு நிகழ்வு இது. மறக்க முடியவில்லை தான்! :(

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

அந்த அங்கலாய்ப்பு எனக்கும் உண்டு உஷா. ஆனாலொன்னு.....

என்னைப் பொருத்தவரை குவாலிட்டி ஆஃப் லைஃப் முக்கியம். குவான்ட்டிட்டி இல்லை. இதுலே கடைசிநாள் வரை எழுதி இருக்கார். ரொம்பக் கஷ்டப்படாமல் போயிட்டார் பாருங்க,

லக்கி பெர்ஸன்ப்பா அவர்.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

பிறப்பையோ இறப்பையோ நாம் தீர்மானிக்க முடியுமா, ஆனாலும் டோண்டு அண்ணா கடைசி வரை
சளைக்காமல் எழுதினார். அவர் மனத்திடம் யாருக்கும் வராது.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

இவ்வளவு அமளி துமளிப் படும் அளவுக்கு டோண்டு பதிவுலகில் முக்கியமானவராக எனக்குத் தோன்ற வில்லை.

வயதான காலத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த ஒரு பதிவர்; நிறைய தமிழில் எழுதுவது அவரது தொழிலுக்கு உதவியாக இருப்பதாலேயே பதிவுலகில் இயங்கினேன் என்று அவரே ஒப்புக் கொண்டார்..

ஒத்த சமூகத்தவர் என்ற கோணத்தில் அவரை ஒரு நெருக்கமான வட்டத்தில் உங்களைப் போன்றவர்கள் பார்க்கலாம்..அவ்வளவே..

அர்த்தமுள்ள பதிவுகள் என்று பார்த்தால் அவரது பதிவுகளில் பத்து கூட தேறாது.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

ஆமாம் கீதா!

துளசி, யோகன்! அவருடைய விருப்பமும் அதே, அவர் மனங்கவர்ந்த மகரநெடுங்குழைகாதன் அதை நிறைவேற்றி வைத்துவிட்டான்

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

//ஒத்த சமூகத்தவர் என்ற கோணத்தில் அவரை ஒரு நெருக்கமான வட்டத்தில் உங்களைப் போன்றவர்கள் பார்க்கலாம்..அவ்வளவே..//

அறிவன், நிச்சயமாக உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. சில மாதங்கள் முன்னர் ஆன்டோ பீட்டரின் திடீர் மரணமும், இப்போது டோன்டுவை அடுத்துக் கேட்ட மலர்மன்னனின் மரணமும் கூடத் தான் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே நீங்கள் ஒத்த சமூகம் எனக் குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. நண்பர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தாலும் நண்பர்களே. :(((( மிகவும் வருத்தமடைய வைத்து விட்டீர்கள். :(((((

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

உஷா,
உங்களது வருத்தத்தை சுட்ட எழுதிய தொனி அது;உங்களது நேர்மையைச் சுட்டும் பொருளில் எழுதியது அல்ல.

காயப்பட்டிருப்பின் வருந்துகிறேன்.

ராகவனிடம் நேரில் நான் பேசியதில்லை; பெரும்பாலும் வலையுலகில் அவர்களது எழுத்து, பதிலிறுக்கும் விதம் இவற்றை வைத்து தான் பலரை எடை போடுகிறோம்.

சில அனுபவங்களிலேயே அவர் ஒரு 'சண்டைக்கார பிராமணர்' என்ற பிம்பமே எனக்குள் மிஞ்சியது.அவரது பல கருத்துகள் யதார்த்தத்திலிருந்து விலகியவையாகவும், மனிதர்களைப் பிரிக்கும் விதத்திலும் இருந்தன.

எனவை அவரைப் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன்.

எனவே அவர் தவிர்க்க இயலாதவர் என்று எனக்குத் தோன்றவில்லையாதலால், ஒத்த சமூகம் பற்றிக் குறிப்பிட வேண்டியதாயிற்று.

ஒரு சிறு விளக்கம் மட்டுமே.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

சாரி,
இது கீத் பாட்டி(!) என்று கூடப் பார்க்க வில்லை.
உங்களுக்கு எழுதியதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். :))

ஆன்டோ பீட்டரைப் பற்றி பத்ரி ஒருவர்தான் எழுதியதாக நினைவிருக்கிறது;மலர்மன்னனைப் பற்றி ஓரிரண்டு பதிவுகள்.

ஆனால் ராகவன் மறைவுக்கு கிட்டத்தட்ட 30 பதிவுகள் வரை வந்து விட்டன.எழுதியவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள் என்றுதான் தோன்றுகிறது.இந்தக் கோணத்திலேயே நான் சுட்ட நேர்ந்தது.(நான் கூறியது தவறெனில் சோதித்துப் பாருங்களேன்..)

நண்பர்களின் சாதியைத் தெரிந்து கொள்ளப் பேரார்வம் காட்டுவது ராகவனின் ஸ்பெஷாலிடிகளில் ஒன்று என்பதை லக்கி லுக்கின் பதிவைப் பார்க்கும் போதும் புரிகிறது..இந்த சூழலில் எனது கருத்து தவறென்று சொல்வீர்களா?

எவரது மறைவும் வருந்தத்தக்கதே.அந்த அளவில்தான் அவரது மறைவும். பதிவுலகின் தூண் என்ற அளவுக்கு எழுப்பப்படும் பிம்பம் தேவையற்றது என்பது எனது பார்வை.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

அறிவன், சாதியை புறந்தள்ளும்பொழுதே, நான் பிறந்த சாதியைப் பற்றிய கணிப்புகளை கடந்துச் செல்ல பழகியிருக்கிறேன். நான் உட்பட, அவரின் எழுத்துக்களை விட,
அவரின் நேர்மையை, தைரியத்தைத்தான் போற்றுகிறோம். அனைத்து மனிதபிறவிகள் ஏதோ
ஒருவகையில் குறைகள் கொண்டவர்களே, இறப்பு என்று வரும்பொழுது, ஏறத்தாழ பத்து வருடங்கள்,
தனிப்பட்ட முறையில் அல்ல- எழுத்தின் மூலமாய் தினமும் அவருடான நட்பு இனி இல்லை எனும்பொழுது, ஏற்படும் வருத்தம் இது, இதை சாதி சார்ந்துப் பார்க்கும்பொழுது வியப்பு ஏற்படுகிறது.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

என் போல அவரை நெடுக எதிர்த்தவர்களின் அஞ்சலிப் பதிவுகளில் இருந்த உரிமையான ஆத்மார்த்தம்...டோண்டுவோடு நெருங்கிய அல்லது அவரது கருத்துக்களோடு ஒத்துப் போனவர்களின் நினைவேந்தல்களில் காண முடியவில்லை. ஒரு வேளை எனக்குத்தான் அப்படித் தோணுகிறதோ என்னவோ.....

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

டோண்டு பதிவர் முன்னோடி மற்றும் எனக்கும் ஓரளவு நண்பர் (மின் அஞ்சல் தொடர்புகள் எதுவும் கிடையாது) என்ற அளவில் அவரது இறப்பு மனதை கொஞ்சம் பிசைஞ்தது, மற்றபடி அவர் எழுத்தில் மகத்தான சாதனைகள் செய்தார் என்று பொய்யான புகழாரம் சூட்டுவதால் அவருக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.

அறிவன் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன், யானைப் படம் போட்டு ஒரு பெண் பதிவர் எழுதிவந்தார், அவரிடம் கேட்டுவிட்டு டோண்டு சாருக்கு எந்த சான்றிதழ் வழங்கினாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், பதிவுலகில் (ஜயராமன் மற்றும் அவரை விட்டுக் கொடுக்காத டோண்டு சார் ஆகியோரால்) வெளிப்படையாக பாதிக்கப்பட்டவர் யானைப் படம் போட்டவரும் ஒருவர்.

ஒரு மரணம் பழையவற்றை மறக்கச் செய்யலாம், ஒருவரின் செயல்களுக்கு மன்னிப்புக் கூட வழங்கலாம், புகழாரம் சூட்டுவது கூட அவரவர் விருப்பம், ஒரு மரணம் ஒருவரை மாமனிதர், புனிதர் என்ற அளவுக்கெல்லாம் புகழ்ந்து எழுதுவதை ஒருவேளை அவரே படிக்க நேர்ந்தாலும் 'போடா ஜாட்டான்' என்பாரோ...

சிலர் அவரது எழுத்துகளை நூலாக்க வேண்டுமென்றெல்லாம் அதீத அன்பை வெளிப்படுத்தியதைப் பார்க்கும் பொழுது நெளிந்தது என்ன வென்று சொல்வது ?

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

//ஆனால் ராகவன் மறைவுக்கு கிட்டத்தட்ட 30 பதிவுகள் வரை வந்து விட்டன.எழுதியவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள் என்றுதான் தோன்றுகிறது.இந்தக் கோணத்திலேயே நான் சுட்ட நேர்ந்தது.(நான் கூறியது தவறெனில் சோதித்துப் பாருங்களேன்..)//

இது கொஞ்சம் தவறான கோணம் என்றே நினைக்கிறேன், டோண்டு சாரின் மறைவை ஒட்டிய பதிவுகள் அனைத்தையும் எனது இடுகையில் இணைத்துள்ளேன், பார்பனர் அல்லோதோர் தான் அதிகம் இடுகை இட்டுள்ளனர், மற்றபடி 'மாமனிதர், மேதை' என்றெல்லாம் பார்பனர் அல்லாதோர் யாரும் குறிப்பிட்டு எழுதவில்லை.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

கோவி. கண்ணன் சொல்லியது அறிவன் கருத்தை எதிர்ப்பதாக இருப்பதால், நான் சொல்வது, டோண்டு இராகவன் (அப்படித்தான் என் பின்னூட்டங்ன் நான் அவரை விளைத்தது அவர் பதிவுகளில்) ஆபிட்சுவரிகள் எழுதியதில் பலர் அபார்ப்பனர்களாக இருப்பதால், அறிவன் கருத்துப் பொய்யாகாது. அதாகப்பட்டது, பார்ப்பனர் – அபார்ப்பனர் இருசாராரின் நினைவேந்தல்கள் வெவ்வேறு மனதளங்களில் எழுதப்பட்டவை. இங்கு சரவணக்குமார் குறிப்பிட்டதைப்போல ஆத்மார்த்தாக எழுதப்பட்டதாக படிப்பவருக்குத் தோன்றுவது அபார்ப்ப்னர்களுடையதே.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

Pardon. I find it difficult to write in Tamil as Tamil typing plays truant in my PC.

It is an absolute hypocrisy to say that Tamil blogosphere, like Tamil society, is not bedeviled with caste divisions - but a slight difference is noteworthy here. That is, our open society is divided by 1 division only: Brahmins vs. Non Brahmins earlier and it still lingers in politics. It is almost gone and what remain are many divisions. Today, the divisions centre on religions too. Muslims vs. Hindus. Hindus vs. both Xians and Muslims. Brahmins are left alone on the one side. Non- Brahmins divide among themselves. Or Non Brahmins middle caste (sociology calls them Caste Hindus) vs. Dalits.

Dondu Raagavan delighted in the divisions of the first kind: Brahmins vs. Non Brahmins i.e. earliest division, maybe due to the fact he belonged to the era when it was born and flourished. In his blogs, he helped inflame that division only as evident from his attack on fellow Brahmins who conceal their caste identity. For him, the caste identity is a life’s breath.

Usha and others write about him: courage of conviction and free, frank and forthright views True, in his blogs, Raagavan consistently showed these qualities in abundance. If that is the criterion to judge a person’s nobility, PMK leader and Konga Velaala Gounder leaders may take the first prize.

Courage of conviction may be with anyone for any cause. The nature of the cause ennobles him, or ignoble him, as the case may be. Never the showing or expressing of that cause ! Tulsi writes: Quality of life, not quantity. Yes, the quality here. From his writings, the quality he shows is questionable. The question is ducked for the same reason as Arivan and Saravanakkumar are citing: Caste loyalty!

Nxt post abt another fallacy in Usha’s post.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

இந்த விஷயத்திலும் மனப்பூர்வமாய் சொல்லியிருந்தால், இன்னும் வாழ்ந்திருக்கலாமோ என்று மனசு அங்கலாய்க்கிறது//

This is a honest statement. The crime of the fake Dondu is not heinous. He was an internet bully. His offence was blown out of proportion by DR followed by others. If the crime is heinous, then you must suggest capital punishment as is the craze in India today for such punishment to heinous crime.

You will now admit it is not heinous coz if it is heinous, then which crime wont b so ? - even a small pickpocket will also be a heinous criminal deserving capital punishment !

All non-heinous crimes r forgivable if the person shows remorse. Whether the fake showed that, I don't know; nor got the opportunity to know coz Ragavan never wrote about that, except telling us what punishment was given to that man: loss of job, confiscation of passport, deportation to India. He had a non working wife with small children to support as I understood from reading Ragavan's old blogposts.

As you have hinted, the man's punishment wd have rankled in Ragavan; he wd have regretted the loss of opportunity to forgive that man.

As you have correctly put it, he wd have shooed away the matter with 'Poda Jaattaan!'.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

The title of your blog post should righty belong to those like the fake Dondu. Also to the Muslims and SL Tamils who felt wounded by the views of Dondu Raagavan. But the views of Ragavan on such matters are political and social and one need not feel sorry in expressing such views coz all views will rub someone somewhere on the wrong side. Just coz it does, according to Raagavan, one can't stop expressing such views: otherwise one wd be dishonest to one's own self. I agree to that point coz I myself follow that. Am I not hurting you too here? But I say that all out, keeping with DR's policy of being true to one's own conscience !!

But abt the fake, it cant be said like that. It s different. Dondu Raagavan's family members shd trace that man out and tell him that Ragavan had forgiven him.

Like that, others too. If not, let them read their religious scriptures and humanise themselves more!

To err is human
To forgive is divine.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

All over. Good bye. I hope at least the last mge of mine will b released in yours.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

கோவி.கண்ணன் பதிவில் என்னுடைய நினைவேந்தல் இல்லை. இனி அவர் இனைத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. :)

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

அஞ்சலியிலும் 'அவர் மேதை இல்லை. அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லை' என்றெல்லாம் சொல்லி எதை நிரூபிக்கப்போகிறார்கள்? புரியவே இல்லை!

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

//அவரின் நேர்மையை, தைரியத்தைத்தான் போற்றுகிறோம். அனைத்து மனிதபிறவிகள் ஏதோ
ஒருவகையில் குறைகள் கொண்டவர்களே//

உஷா, நீங்கள் கூட இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை, ஒருவரின் வரட்டுப் பிடிவாதம், தனது சாதிப் பற்றை கூச்ச நாச்சமில்லாமல் வெளிப்படுத்துவது நேர்மை என்றால் எந்த ஒருவரையும் சாதிவெறியர் என்று கூட ஒருவருக்கும் உரிமை இல்லாமலும் கண்டிக்க இயலாமலும் போய்விடும்

தனது கடைசி பதிவாகக் கூட ஒரு இஸ்லாமிய வெறுப்புப் பதிவைத்தான் அவரால் எழுத முடிந்திருக்கிறது, இதை அவரின் மன தைரியம் என்று எழுதுவது நடுநிலையாளர்களுக்கு அழகு இல்லை.

பெரியார் உள்ளிட்டவர்களை அவர் சாடியும், இகழ்ந்தும் எழுதியவை உங்களுக்கு நேர்மையான விமர்சனமாகத் தெரிந்தால் அது எனக்கு அவரின் சாதித் திமிர் என்று தான் பார்க்க முடியும்.

முகத்துக்கு நேராக காரி உமிழும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு என்று எவரும் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

தான்தோன்றித் தனத்தை நேர்மை என்றும், திமிர்தனத்தை தைரியம் என்றும் புரிந்து கொள்வதும், அதை வழிமொழிவதும் மிகவும் ஆபத்தானவை.

எனக்கு டோண்டு சார் மீது தனிப்பட்ட காழ்புணர்வுகள் எதுவும் இல்லை, எனது விமர்சனங்கள் அவரின் எழுத்தின் மீதானவை மட்டுமே.

இன்னும் கொஞ்ச நாள் அவர் வாழ்ந்திருக்கலாமே என்கிற உங்களது எண்ணம் பாராட்டத் தக்கது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இங்கும் சில பதிவுகளிலும் அவர் ஒரு பிராமணக் கேடயம் என்பது போல் எழுதுகிறார்கள், திராவிடக் குஞ்சுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றும் முழங்குகிறார்கள். போலி டோண்டுவை பலமாக எதிர்த்தார் என்றும் எழுதுகிறார்.

செந்தழல் ரவி என்கிற ஒரு பதிவர் தனது மனைவியின் (மேல்) சாதி குறித்து டோண்டுவிடம் தெரிவித்த அடுத்த நிமிடத்தில் போலி டோண்டுவிடமிருந்து ஆபாச அர்சனைகள் ரவிக்குச் சென்றதாம், இதை ரவியே தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். டோண்டுவின் போலி டோண்டு எதிர்ப்புக்கு இதைவிட சிறந்த சான்றுகள் இருக்க முடியது.

போலி டோண்டு இருந்தவரை டோண்டுவும் பதிவுலகில் பேசப்படக் கூடியவராக வலம் வந்தார் அதன் பிறகு அவரை யாரும் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை, போலி டோண்டு விவகாரம் முடிந்து போனதால் டோண்டு சாருக்கு தனிப்பட்ட இழப்பு தான்.

இது தான் அவர் பழையவற்றை எத்தனை காலமாக நினைவு வைத்திருந்ததன் ரகசியம்.

*****

ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வது அவரை இகழ்வதைக் காட்டிலும் கேவலமானது பொருத்தமில்லாதது.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

//மு.சரவணக்குமார் said...
கோவி.கண்ணன் பதிவில் என்னுடைய நினைவேந்தல் இல்லை. இனி அவர் இனைத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. :)//

கண்ணில் பட்ட பதிவுகள் அனைத்தையும் இணைத்தேன், உங்களது எப்படி கண்ணில் இருந்து விடுபட்டது என்று தெரியவில்லை, உங்கள் இடுகையையும் படித்துவிட்டு இணைத்துவிட்டேன், மிக்க நன்றி

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

அப்படியா? கேட்பதற்கே மிகவும் வேதனையாக உள்ளது. துவக்க காலத்தில் நானும் அவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பின்னர் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தில் தொடர்பு விட்டுப்போனது. நல்ல நண்பர். ஆனால் சற்று அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அத்தனை குழப்பத்திலும் எங்கள் இருவரிடையிலான நட்பு கொடவில்லை. நான் ஒரு மாதகாலமாக ஊரில் இல்லை. பதிவுலக தொடர்பும் விட்டுப்போனது. இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய ஆன்மா இறைபதம் அடைய வேண்டுகிறேன்.

 
At Monday, 11 February, 2013, சொல்வது...

கோவி, நேர்மை என்பதற்கு அளவுகோல் அவரவர் செளகரியப்படி :-) நான் பிராமணன் பெருமைப்பட்டுக்கொண்டவர், அடுத்து தான் சிக்கன் தின்றதையும், குடிப்பதையும்
சொல்லிக் கொண்டார். இதை நான் நேர்மை என்கிறேன்.
போலி விவகாரத்தை திரும்ப திரும்ப ஆரம்பிக்காதீர்கள் என்று நானும் கண்டித்திருக்கிறேன். ஊதி
ஊதி பெருசாக்கிய பெருமை இவருக்குதான். பர்சனலாய் அவருடன் தொடர்ப்பு இல்லை, ஆனால்
நான் சந்தித்த மூன்று நான்கு முறை சில நிமிட பேச்சில் போலி டோண்டு மேட்டரை ஆரம்பித்துவிடுவார். இம்முறை உடல்நலமில்லாத பொழுதும், அதையே ஆரம்பித்தப் பொழுது எனக்கு அன்று மிக
ஆச்சரியமாய் இருந்தது, இந்தளவு மனசில் போட்டு குழப்பிக் கொள்கிறாரே என்று. கொஞ்சம்
சினிக்கலாய் அந்தாளை நினைத்து நினைத்து அவரே ஆகிவிட்டாரோ என்றும். பொதுவாய்
அட்வைஸ் செய்வது பிடிக்காது என்பதால் அன்று சும்மா இருந்தை, இன்று இங்கு கொட்டிவிட்டேன்.
இந்த பதிவின் நோக்கம் அது மட்டுமே!

 
At Wednesday, 13 February, 2013, சொல்வது...

//கோவி.கண்ணன் சொல்வது...
தனது கடைசி பதிவாகக் கூட ஒரு இஸ்லாமிய வெறுப்புப் பதிவைத்தான் அவரால் எழுத முடிந்திருக்கிறது//
சவூதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய நெறிகளை மற்றவர்களுக்கு கற்று தரும் மதகுரு ஷேக் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகள் குழந்தை லாமியா அல் கம்தியை பாலியல் கொடுமை செய்து கொன்று விட்டார். இதை பற்றி டோண்டு ராகவன் பதிவு எழுதியது இஸ்லாமிய வெறுப்புப் பதிவா? அப்போ இதை கண்டும் காணாத மாதிரி இருந்தா நடு நிலைவாதி!!!

 
At Sunday, 17 February, 2013, சொல்வது...

நான் சமீபத்தில் (2004) பார்த்தது தான் பிறகு சந்தர்ப்பம் அமையவில்லை.

 
At Sunday, 15 September, 2013, சொல்வது...

//சவூதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய நெறிகளை மற்றவர்களுக்கு கற்று தரும் மதகுரு ஷேக் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகள் குழந்தை லாமியா அல் கம்தியை பாலியல் கொடுமை செய்து கொன்று விட்டார். இதை பற்றி டோண்டு ராகவன் பதிவு எழுதியது இஸ்லாமிய வெறுப்புப் பதிவா? அப்போ இதை கண்டும் காணாத மாதிரி இருந்தா நடு நிலைவாதி!!!//

சகோ வேகநரி சரியாக கேட்டீர்கள்! கோவி கண்ணனே இந்த ரக பதிவு போட்டு சுவனபிரியனிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கறார். அதெல்லாம் இசுலாமிய எதிர்ப்பு பதிவு இல்லையா? தான் உடைத்தால் மண்குடம்...
-----------------------------------
ஒருவர் இறந்த பிறகு அவர் செய்த கெட்டதை மறந்த இந்திரனே சந்திரனே என்பது தமிழ்நாட்டு வழக்கம்தானே? இந்த ஒப்பாரி ரக பதிவில் வந்து எதற்கு நீதிமான் வேடம் போடுகிறார்கள் எனத் தெரியவில்லை. பிடிக்கவில்லை எனில் மூடிகிட்டு போவதுதான் மரியாதை!

 

Post a Comment

<< இல்லம்